Saturday, May 20, 2017

சென்னையை ஆட்சி செய்த வன்னிய குல சத்ரிய நாயக்கர் மன்னர்


சென்னப்ப நாயக்கர்



 வந்தவாசியை விஜயநகர பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த தமிழ் வன்னிய நாயக்கரான சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கடாத்திரி மற்றும் அய்யப்பன் ஆகியோரிடம் இருந்து 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட பகுதியே "சென்னப்ப நாயக்கர் பட்டினம்" என்று அழைக்கப் பட்டது.

  சென்னப்ப நாயக்கர் மகன் அய்யப்ப நாயக்கரின் பெயரில் இருந்தே "அய்யப்பன் தாங்கல்" என்னும் ஊர் வழங்கப்படுகிறது.. தற்போதும் இவரின் வாரிசுகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கேட்டால் கூட சொல்வார்கள் சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழ் வன்னிய நாயக்கர் என்பதை.




விஜய நகர தெலுங்கு நாயக்கர் பிரதிநிதியாக இருந்த ஒரே காரணத்துக்காக சென்னப்ப நாயக்கரை "தெலுங்கர்" என்று விவரம் அறியாத சிலர் கூறி வருகின்றனர். மேலும் சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னப்ப நாயக்குடு என்று வேறு எழுதி வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்க தக்கது. சென்னையில் "நாயக்கர்" என்பது தமிழ் நாயக்கரான வன்னிய குல க்ஷத்ரியர்களையும். நாயுடு என்பது தெலுங்கு நாயக்கர்களையும் குறிக்கும். தெலுங்கு நாயக்கர்கள் தமிழ் பேசும் பகுதிக்குள் வருவதற்க்கு முன்பில் இருந்தே வன்னியர்கள் "நாயக்கர்" என்று அழைக்கப்பட்டதாலே. நிறையத் தமிழ் சாதி மக்கள் விஜய நகர மன்னர்களின் பிரதிநிதியாக இருந்த போதிலும் வன்னியர் மட்டுமே தமிழ் சாதிகளில் "நாயக்கர்" பட்டத்தினை தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

"நைனா" என்று தந்தையை அழைக்கும் வழக்கம் வன்னிய நாயக்கர், வன்னிய ரெட்டியார்களிடம் இன்று வரை உள்ளது. மேலும் சென்னையில் தமிழை கற்க்கும் முன் தெலுங்கு கற்பது ஒரு காலத்தில் கட்டாயமாக இருந்தது. எனவே வன்னியர்களும் தெலுங்கு பேசுவர். பாரதிதாசன் சொன்னது போல எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..இங்கு பிறப்பினும் அயலன்அயலனே .....


வளர்க சென்னை..வாழ்க அதன் புகழ்...




சென்னையை ஆட்சி செய்த வன்னிய குல சத்ரிய நாயக்கர் மன்னர்

சென்னப்ப நாயக்கர்   வந்தவாசியை விஜயநகர பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த தமிழ் வன்னிய நாயக்கரான சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கட...